Testimonial Videos
Verithanam Road Safety Video Contest in Coimbatore
Appointment Appointment
Appointment
Book Your Appointment

உடலினை உறுதி செய்…!

“உடலினை உறுதி செய்…!”

இந்த மகா மந்திரத்தை மண்ணுக்கு சொன்னவர் மகாகவி பாரதி. அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது தான் மிகப்பெரிய வருத்தம்.

பாரதிக்கு 5 வயது இருக்கும் போது அவருடைய தாயார் மறைந்து விடுகிறார். தந்தையாரும் இரண்டாவது திருமணம் நல்லபடி முடிந்து வந்த சிறிய தாயாரும் பாரதியை நன்கு பார்த்துக் கொள்கிறார்.

ஆனால் அவருடைய தந்தை சின்னசாமி ஐயர் கண்டிப்புக்கு பெயர் போனவர்.

தன் மகன் விளையாட்டுகளில் ஈடுபடவோ ஆடிப் பாடவோ அவர் அனுமதித்ததே இல்லை.

தன் வயதை ஒத்த சிறுவர்கள் ஆடியும் ஓடியும் மரத்தில் ஏறியும் குளத்தில் குதித்தும் விளையாடும் போது தந்தையின் கண்டிப்புக்கு அஞ்சி அவர் சொன்ன வண்ணம் தான் ஓர் ஓரமாக உட்கார்ந்து புத்தகங்களை படித்துக் கொண்டே இருந்ததாக பாரதி தன் சுயசரிதை கவிதையில் குறிப்பிடுகிறார்.

"ஆண்டொரு பத்தினில் ஆடியும் ஓடியும்
ஆறு குளத்தில் நீச்சிலும் பேச்சிலும்
ஈண்டு பல்மரத்து ஏறிய இறங்கியும்
என்னோடு ஒத்த சிறுவர் இருப்பரால்
வேண்டும் தந்தை விதிப்பினுக்கு அஞ்சி
யான் வீதி ஆட்டங்கள் ஏதிலும்
கூடிலேன்; தூண்டு நூல் கணத்தோடு
தனியனாய் தோழமை பெரிது இன்றி வருந்தினேன்."

என்று மகாகவி பாரதி தன் பிள்ளைப் பருவத்து வாழ்க்கையை பதிவு செய்கிறார்.

இதனால்தான் அவர் வளர்ந்த பிறகு நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு எழுதும் போது "ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா" என்று பாடுகிறார்.

தேசத்தை உய்விக்க வந்த மகாகவிக்கு வாய்க்காத வாய்ப்பு இந்த தேசத்தில் இருக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக விஜிஎம் மருத்துவமனை ஒரு மாபெரும் ஓட்ட நிகழ்ச்சியை விழிப்புணர்வுக்காகவும் தேசநலன் கருதியும் உருவாக்கி இருப்பது பாராட்டுக்கு உரியது.

இந்த முயற்சி வெற்றி பெறவும் மகாகவி பாரதி கனவு கண்டபடி உடல் உறுதி மிக்க இளைய தலைமுறை உருவாகவும் இந்த இனிய வேளையில் வாழ்த்தி மகிழ்கிறேன்!

உடல் உறுதி மிக்க இளைய தலைமுறை உருவாகட்டும்!

தமிழ்ப் புலவர்கள் மற்றும் ஆசிரியர்
மரபின் மைந்தன் முத்தையா